

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் நேற்று வருவாய்த்துறை மந்திரி அசோக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த நாட்டை பாதுகாக்க தொடங்கப்பட்ட அமைப்பு என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், குமாரசாமி அடிக்கடி ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக பேசி வருகிறார். ஏதோ ஒரு புத்தகத்தை படித்து விட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி பேசுவது சரியல்ல. அந்த புத்தகத்தில் இருப்பது தான் உண்மை என்றும் குமாரசாமி பேசி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த நாட்டை பாதுகாக்க தொடங்கப்பட்டதாகும்.
ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரியாமல் குமாரசாமி பேசக்கூடாது. காங்கிரசில் ஒற்றுமை இல்லை. கர்நாடக காங்கிரஸ் வேறு, தேசிய அளவில் உள்ள காங்கிரஸ் வேறு என்ற நிலையில் தான் இருக்கிறது. பா.ஜனதாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். இன்னும் 1 ஆண்டுகள் அவரே முதல்-மந்திரியாக இருப்பார். அடுத்து நடைபெறும் சட்டசபை தேர்தலும் பசவராஜ் பொம்மை தலைமையிலேயே சந்திப்போம்.
இவ்வாறு மந்திரி அசோக் கூறினார்.