நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 'பி.ஜி. நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இந்த நிலையில், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது.

இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும் என்றும் வருகிற 28-ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நெக்ஸ்ட் தேர்வுக்கு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com