2013-17-ல் ஜேஎன்வி மாணவர்கள் தற்கொலை; மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

2013-17-ல் ஜேஎன்வி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் விடுத்துள்ளது.
2013-17-ல் ஜேஎன்வி மாணவர்கள் தற்கொலை; மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
Published on

புதுடெல்லி,

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 2013 முதல் 2017 வரையில் 49 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் விடுத்துள்ளது.

தற்கொலையில் 7 மாணவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களை பிற மாணவர்கள் அல்லது பள்ளி பணியாளர்கள் கண்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்று தெரிவித்துள்ளது. மாணவர்கள் தற்கொலை விவகாரத்தில் கவலையை தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது தொடர்பாக பயிற்சி பெற்ற ஆலேசகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக அறிக்கையை கேட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com