ஆந்திரா, தெலுங்கானாவில் 62 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை: மாவோயிஸ்டு தலைவர் கைது

ஆந்திரா, தெலுங்கானாவில் 62 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஆந்திரா, தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வழக்குகளை தேசிய புலானய்வுப்பிரிவு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இரு மாநிலங்களிலும் நேற்று 62 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அந்தவகையில் ஆந்திராவின் குண்டூர், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட மாவட்டங்களில் 53 இடங்களிலும், தெலுங்கானாவில் ஐதராபாத், மெகபூப் நகர் உள்ளிட்ட 9 பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் ஆந்திராவின் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்டு தலைவர் சந்திர நரசிம்முலு என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சோதனையில் ஆயுதங்கள், பணம், ஆவணங்களும் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த சோதனை நடவடிக்கை இரு மாநிலங்களிலும் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com