

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டும் விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. தொடர்ந்து சோதனை, கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்நிலையில் எல்லை தாண்டிய வணிகத்துடன் தொடர்புடைய தொழில் அதிபர்களுக்கு சொந்தமான 7 இடங்களில் தேசியப் புலனாய்வு பிரிவு சோதனையை மேற்கொண்டது. மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.