இந்தியாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
Image Courtesy: PTI  
Image Courtesy: PTI  
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் மற்றொரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுடெல்லியில் குரங்க அம்மையால் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய நைஜீரிய பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் குரங்கு அம்மையின் 14வது வழக்கு இதுவாகும். இதனை அடுத்து, இப்போது டெல்லி நகரில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதே மாநில அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் குரங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிவுகள் தற்போது வரை வரவில்லை. கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் வசிக்கும் மற்றொரு 30 வயது நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com