மராட்டிய மாநிலம் புனேவில் இரவு நேர ஊரடங்கு அமல்

மராட்டிய மாநிலம் புனேவில் இன்றிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் இரவு நேர ஊரடங்கு அமல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் ஊரடங்கு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் புனே நகரில் இன்றைய தினத்தில் இருந்து ஒரு வாரம் இரவு நேர ஊரடங்கு (மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை) அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாலை 6 மணிக்கு இரவு நேர ஊரடங்கு தொடங்கியது. புனே நகர் போலீசார் சாலைகளில் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com