ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம் - இந்திய கடற்படையின் புதிய மைல்கல்

ஐ.என்.எஸ். விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய போர் விமானம் - இந்திய கடற்படையின் புதிய மைல்கல்
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இந்நிலையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியதாகவும், இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், "ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் மிக்-29கே விமானத்தை முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறத" என்றார். இரவு நேர தரையிறக்க சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

#IndianNavy achieves another historic milestone by undertaking maiden night landing of MiG-29K on @IN_R11Vikrant indicative of the Navy's impetus towards #aatmanirbharta.#AatmaNirbharBharat@PMOIndia @DefenceMinIndia pic.twitter.com/HUAvYBCnTH

SpokespersonNavy (@indiannavy) May 25, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com