சத்தீஸ்கர்: பாதுகாப்புப்படையினரால் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


சத்தீஸ்கர்:  பாதுகாப்புப்படையினரால் 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 3 Sept 2024 4:37 PM IST (Updated: 3 Sept 2024 4:41 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 9 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்ட எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது,பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதற்கு பாதுகாப்புப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 9 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சிலர் தப்பி ஓடியதாக தெரிகிறது. அவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story