அசாமில் வெள்ளம்: 9 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழப்பு

அசாமில் பெய்த கனமழையால் காசிரங்கா வன உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.
அசாமில் வெள்ளம்: 9 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் உயிரிழப்பு
Published on

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றா அசாமில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக காசிரங்கா உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வெள்ளத்தில் சிக்கி 9 காண்டா மிருகங்கள் உள்பட 108 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து காசிரங்கா பூங்காவின் இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காசிரங்கா பூங்காவின் 80 சதவீதப் பகுதி இன்னும் வெள்ளத்தில் மூழ்கியே காணப்படுகிறது, வெளியேறி சென்ற காண்டாமிருகங்கள் மீண்டு விட்டன.

இறப்பு எண்ணிக்கையைப் பொறுத்த வரை, 9 காண்டாமிருகங்கள் 108 உட்பட விலங்குகள் பலியாகியுள்ளன. நாங்கள் 136 விலங்குகளை காப்பாற்றியுள்ளோம். வெள்ளம் வடியத் துவங்கியிருப்பதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று நினைக்கிறோம். சரியான பலி எண்ணிக்கைக்காக எல்லாப் பகுதிகளிலும் கணக்கெடுப்புகளை நடத்தி வருகிறோம்என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com