நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்: நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது - பிரதமர் மோடி

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
படம்: PTI
படம்: PTI
Published on

புதுடெல்லி

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (27), அக்ஷய் குமார் (33) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

குற்றவாளிகள் தூக்கிலிட பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டரில் பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த தண்டனை மிக முக்கியமானது . நீதி நிலை நாட்டப்பட்டு உள்ளது

"நமது சக்தி ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது. பெண்கள் வலுவூட்டலில் கவனம் செலுத்தும் ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும், அங்கு சமத்துவம் மற்றும் வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது," என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com