பொருளாதாரத்தை சீரமைக்க நிதி மந்திரியின் அறிவிப்பு அழகுபடுத்தும் ஒப்பனைதான் - காங்கிரஸ் தாக்கு

பொருளாதாரத்தை சீரமைக்க நிதி மந்திரியின் அறிவிப்பு அழகுபடுத்தும் ஒப்பனைதான் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தை சீரமைக்க நிதி மந்திரியின் அறிவிப்பு அழகுபடுத்தும் ஒப்பனைதான் - காங்கிரஸ் தாக்கு
Published on

புதுடெல்லி,

பொருளாதார மந்தநிலையை சீரமைக்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்த புதிய திட்டங்கள் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:-

பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்பது பற்றி நிதி மந்திரிக்கு எதுவும் தெரியவில்லை. பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது. சமீபத்திய அறிவிப்புகளும் உதவப்போவதில்லை. இந்திய நிதி மந்திரிக்கு சிறிதளவுகூட புரிதல் இல்லை.

பொருளாதாரத்தை சீரமைக்க ஒரு முழுமையான திட்டங்களின் தொகுப்பு தேவைப்படுகிறது. இன்றைய அறிவிப்புகள் எதுவும் இந்திய பொருளாதாரத்தை சீரமைக்காது. அவை ஒரு அழகுபடுத்தும் ஒப்பனை மட்டுமே. சிறிய அளவிலான இந்த அறிவிப்பு அரசின் கர்வமான போக்கையும், நிலைமையின் தீவிரத்தன்மையை அலட்சியம் செய்வதையுமே காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com