

டெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை மறுதினம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லியில் 57வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை நடைபெற இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை மறுதினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிப்பகிர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.