நாளை விண்ணில் பாய்கிறது 'நிசார்'

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 4.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை விண்ணில் பாய்கிறது 'நிசார்'
Published on

ஐதராபாத்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை (புதன்கிழமை) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்டவுன் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும் போது, 'இஸ்ரோ-நாசா இணைந்து பூமியைக் கண்காணிக்கும் ரேடார் செயற்கைக்கோளான 'நிசார்' செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளன. இந்த செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒரு முறை உயர் தெளிவுத்திறன் கொண்ட பூமித் தரவுகளை வழங்கும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com