நிதின்கட்காரியின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி

நிதின்கட்காரியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.25 கோடியாக உள்ளது.
நிதின்கட்காரியின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி
Published on

நாக்பூர்,

மத்திய மந்திரி நிதின்கட்காரி மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தனது பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.69.38 லட்சம், மனைவி பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.91.99 லட்சம், கூட்டுக்குடும்பத்தின் பெயரில் உள்ள சொத்து ரூ.66.07 லட்சம் என்றும் கூறியுள்ளார். அசையா சொத்துகளாக தனது பெயரில் ரூ.6.95 கோடி என்றும், தனது மனைவி பெயரில் ரூ.6.48 கோடி என்றும், கூட்டுக்குடும்ப பெயரில் ரூ.9.40 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

தனது பெயரில் 29 ஏக்கர் விவசாய நிலமும், தனது மனைவி பெயரில் 15 ஏக்கர் நிலமும், கூட்டுக்குடும்ப பெயரில் 14.60 ஏக்கர் நிலமும், நாக்பூர் மஹாலில் ஒரு பழமையான வீடும், மும்பை ஓர்லியில் ஒரு வீடும் உள்ளது. பல்வேறு சேமிப்பு திட்டங்களில் ரூ.3.55 லட்சமும், வங்கி கணக்கில் ரூ.8.99 லட்சமும், மனைவி பெயரில் வங்கியில் ரூ.11.07 லட்சமும் உள்ளது என்றும் வங்கி கடன் ரூ.1.57 கோடி உள்ளதாகவும், 6 கார்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com