பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை: நிதின் கட்காரி

பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று நிதின் கட்காரி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை: நிதின் கட்காரி
Published on

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இதுபற்றி நிதின் கட்காரி கூறியதாவது:- எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை அரசு தடை செய்யப் போவதாக பொதுவாக ஒரு கவலை நிலவுகிறது.

ஆனால், ஆட்டோமொபைல் துறையில் நாட்டின் ஏற்றுமதியிலும் வேலை வாய்ப்பிலும் அளிக்கும் பங்களிப்பை அரசு நன்றாக அறிந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. ஆட்டோ மொபைல் துறையின் மதிப்பு இந்தியாவில் ரூ.2.45 லட்சம் கோடியாக உள்ளது. தூய்மையான எரிபொருள் ஆதாரங்களை நோக்கி இந்த துறை செல்ல வேண்டியது அவசியம். மாசு பிரச்சினை நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

காற்று மாசு பிரச்சினைக்கு வாகனங்களை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமாகாது. எனினும், வாகனங்களும் பொறுப்பாக உள்ளன. அனைவருக்கும் டெல்லியில் நிலவும் காற்று மாசு உலகம் முழுவதும் விமர்சிக்கப்படுகிறது. டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்சினைக்கான காரணத்தை அறிய ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டத்தை அரசு வடிவமைத்துள்ளது. தற்போது 29 சதவீத காற்று மாசு டெல்லியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காற்று மாசுவை குறைப்பது தேசிய நலன் சார்ந்தது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com