

புதுடெல்லி,
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், ராஜ்ய சபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
நாடாளுமன்ற ராஜ்ய சபா காலி பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், பீகாரில் இருந்து பாஜக தேசிய தலைவர் நிதின் நபினும், சிவேஷ் குமாரும் போட்டியிட இருக்கின்றனர்.
அசாமில் இருந்து திராஷ் கவ்வாலா, ஜோகன் மோகன் ஆகியோரும், சத்தீஷ்கரில் இருந்து லட்சுமி வர்மாவும், அரியானாவில் இருந்து சஞ்சய் பாட்டியாவும், ஒடிசாவில் இருந்து மன்மோகன் சமல், சுஜித் குமார் ஆகியோரும், மேற்கு வங்காளத்தில் இருந்து ராகுல் சின்காவும் போட்டியிடுகின்றனர்.