10 முறை முதல்-மந்திரி: உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிதிஷ்குமார்

பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா கூறியுள்ளார்.
FILEPIC
FILEPIC
Published on

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. இதற்கு நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி 202 தொகுதிகளை வென்று அசத்தி அமோக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

இந்தநிலையில், அரசியலில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்-மந்திரியாக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ்குமார் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

10வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் உண்மையிலேயே அரிய சாதனை.

பீகார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல. இது பீகாருக்கு ஒரு வரலாற்று தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது. பீகாருக்கு ஒரு பெருமையான தருணம். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் நிலையான அர்ப்பணிப்புள்ள தலைவரை போற்றுவோம் என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com