கொரோனா பெயரால் ராகுலுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு ஏன்? - நிதிஷ் குமார் கேள்வி

கொரோனா பெயரால் ராகுலுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்பாடு விதிக்கிறது என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் அல்லது பாதயாத்திரையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி, அவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாட்னாவில் நேற்று பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமாரிடம், இதையொட்டி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், "அவர்கள் (மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு) கொரோனாவில் முதலில் ஏன் பின்வாங்கினார்கள், இப்போது காங்கிரசார் பாதயாத்திரை போகிறபோது இப்போது எதனால் திடீரென விழிப்புடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்தாக வேண்டும். யாத்திரைக்கு ஏன் அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? அவர்கள் (பா.ஜ.க.) மட்டும் ஊர்வலங்கள் எல்லாம் நடத்துகிறார்களே?" என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com