மதவாத சக்திகளின் அச்சுறுத்தலால் யோகாவை நிதிஷ் எதிர்க்கிறார் - பாஜக

பிகார் அரசு சர்வதேச யோகா தினத்தை புறக்கணிப்பதன் பின்னால் மத அடிப்படைவாதிகள் இருக்கின்றனர் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
மதவாத சக்திகளின் அச்சுறுத்தலால் யோகாவை நிதிஷ் எதிர்க்கிறார் - பாஜக
Published on

பட்னா

அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலால்தான் அரசு சார்பில் எவ்வித கொண்டாட்டங்களும் வேண்டாம் என்று நிதிஷ் கூறியுள்ளார் என்றார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி.

நிதிஷ் தனிப்பட்ட முறையில் யோகா செய்பவர் என்றாலும் மதவாத சக்திகளின் அச்சுறுத்தல் காரணமாகவே யோகா தினத்தை புறக்கணிக்கிறார் என்றார் சுஷில் மோடி.

வரும் ஜூன் 21 அன்று இஸ்லாமிய நாடுகள் உட்பட உலகம் முழுதும் யோகா அனுசரிக்கப்படும் நிலையில் பிகார் அரசு மட்டும் எதிர்க்கிறது. இருப்பினும் பிகாரில் லட்சக்கணக்கானோர் யோகா விழாக்களில் கலந்து கொள்வார்கள் என்று சுஷில் மோடி கூறினார்.

முதல்வர் நிதிஷ் மது விலக்கை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் யோகாவை பிரபலபடுத்த வேண்டும் என்றார் சுஷில். யோகா செய்பவர்கள் மது அருந்துவதில்லை என்றார் சுஷில் மோடி. மேலும் பள்ளி பாடத்திட்டங்களில் யோகாவை வைக்க வேண்டும் என்றார் சுஷில் மோடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com