

பட்னா
தங்கள் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பல அம்சங்களை பரிசீலித்தப் பின்னரே ராம்நாத் கோவிந்த்தை ஆதரிப்பது என முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். பிகாரின் மகளான மீரா குமாரை தோற்பதற்காகவே தேர்வு செய்துள்ளதாக காங்கிரஸை அவர் குறை கூறினார். எங்களுக்கு பிகாரின் மகள் மீது மரியாதையுண்டு, அதே சமயம் தேர்தல் முடிவு பற்றியும் சந்தேகமில்லை, நீங்கள் இரண்டு முறை சந்தர்ப்பவாதிகளாக இருந்துள்ளனர். ஜெயிக்கும் வாய்ப்பு இருக்கும்போது மீரா குமாரை ஏன் தேர்வு செய்யவில்லை? காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயார் ஆகிறீர்கள். ஆனால் தோற்கும் உத்தியுடன் துவங்குகிறீர்கள் என்று காங்கிரஸை கண்டித்து அவர் கூறினார்.
முன்னதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுவின் கோரிக்கை நிராகரித்த நிதிஷ் தங்கள் முடிவு தகுதியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றார். தான் காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பிகார் ஆளுநரை தேர்வு செய்வது கௌரவமான விஷயம் என்று கூறியதாக தெரிவித்தார். கோவிந்த் பிகார் விஷயத்தில் பாரபட்சமின்றி நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இத்தேர்தல் குடியரசுத் தலைவர் பதவிக்கானது. இதில் அரசியல் சர்ச்சை எதுவம் இருக்ககூடாது என்று தெரிவித்த அவர். ஒருமித்த கருத்து இருந்திருந்தால் நல்லது. ஆனால் அதை கேள்வி கேட்பதற்கான விஷயமாக கருதக்கூடாது என்று குறிப்பிட்டார் நிதிஷ்.