பட்ஜெட் 2021: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை

பட்ஜெட் 2021ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
பட்ஜெட் 2021: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை
Published on

புதுடெல்லி

2021-22 ஆம் ஆண்டின் பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்து பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம். (பட்ஜெட்டில் மாத ஊதியதாரர்களுக்கு எந்த வரிச்சலுகையும் வழங்கப்படவில்லை)

வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு.

இது உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்கப்படுத்தவும் குறைந்த விலை உடைய வீட்டு வசதி திட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கவும் உபயோகமாக இருக்கும்.

புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு வருவாய் மீதான வரிக்கு வரிவிலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுகிறது.

பருத்தி மீது 10 சதவீத சுங்கவரி அறிமுகம்.

பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியும் 10 லிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பு

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றியமைப்பு

வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தீர்வை விதிக்க திட்டம்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com