காங்கிரசுடன் கூட்டணி இல்லை: குஜராத்தில், தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டி

குஜராத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணியை தவிர்த்து, தனித்து போட்டியிட உள்ளது.
காங்கிரசுடன் கூட்டணி இல்லை: குஜராத்தில், தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டி
Published on

ஆமதாபாத்,

நாடாளுமன்ற தேர்தலில், குஜராத்தில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட முதலில் ஆர்வமாக இருந்தன. ஆனால், சங்கர்சிங் வகேலாவை தேசியவாத காங்கிரசில் சேர்த்ததால், அதனுடன் கூட்டு சேர காங்கிரஸ் தயங்கி வருகிறது.

இதனால், குஜராத்தில் தேசியவாத காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் குஜராத் மாநில தலைவர் ஜெயந்த் பட்டேல் நேற்று கூறினார். மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com