பீகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: 24-ந் தேதி ஓட்டெடுப்பு

ஆட்சி மாறியும் ராஜினாமா செய்யாத பீகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.
பீகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: 24-ந் தேதி ஓட்டெடுப்பு
Published on

பாட்னா,

பீகாரில், பா.ஜனதா ஆதரவுடன் நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது, பா.ஜனதாவை சேர்ந்த விஜயகுமார் சின்கா, சபாநாயகராக நியமிக்கப்பட்டார். பா.ஜனதா உறவை துண்டித்து விட்டு, ராஷ்டிரீய ஜனதாதளம் ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரி ஆகி உள்ளார்.

ஆட்சியில் ஏற்பட்ட மாற்றத்துக்கு பிறகும், விஜயகுமார் சின்கா ராஜினாமா செய்யவில்லை. இதையடுத்து, அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். அதை சட்டசபை செயலகத்தில் அளித்துள்ளனர்.

நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக 24-ந் தேதி சட்டசபை கூடுகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தவுடன், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கும் என்று தெரிகிறது.

ஆளும் கூட்டணிக்கு 164 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 77 எம்.எல்.ஏ.க்களும் இருப்பதால் தீர்மானம் எளிதாக நிறைவேறும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com