ஊழலில் ஈடுபடும் தனிநபரோ, நிறுவனமோ தப்ப முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை

ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ, நிறுவனமோ தப்ப முடியாது. என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், 31-ந்தேதி முதல் நவம்பர் 6-ந்தேதிவரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊழலை சிறிதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து கடந்த 8 ஆண்டுகளாக இந்தியா நடைபோட்டு வருகிறது. ஊழலில் ஈடுபடும் எந்த தனிநபரோ, நிறுவனமோ தப்ப முடியாது.

ஒவ்வொரு கவுரவமான மனிதரும் தங்கள் மீது பெருமை கொள்ளும் நம்பிக்கையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஊழலை வேரோடு அகற்ற ஒட்டுமொத்த நடைமுறையும் வெளிப்படையாக ஆக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல, வருங்காலத்திலும் எல்லா மட்டத்திலும் ஊழலுக்கு வாய்ப்பே இல்லை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் நாடாக, வளர்ந்த நாடாக மாற்றுவது ஒவ்வொருவரின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com