குழாய் எரிவாயு உள்ளவர்களுக்கு சிலிண்டர் இல்லை: மத்திய அரசு உத்தரவு

ஏற்கனவே இரண்டும் வைத்திருப்பவர்கள் சிலிண்டர் இணைப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழாய் எரிவாயு உள்ளவர்களுக்கு சிலிண்டர் இல்லை: மத்திய அரசு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

குழாய் வழி எரிவாயு (PNG) இணைப்பு பெற்றவர்கள் (LPG) சிலிண்டர் பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட உத்தரவின்படி, குழாய் எரிவாயு இணைப்புடன் (LPG) சிலிண்டர் இணைப்பையும் வைத்திருக்க அனுமதி இல்லை. ஏற்கனவே இரண்டும் வைத்திருப்பவர்கள் சிலிண்டர் இணைப்பை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

எண்ணெய் நிறுவனங்களும், குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு(LPG) சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடாது’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com