நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்

நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றக் குழு அறிக்கைக்கு மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
படம்: PTI
படம்: PTI
Published on

புதுடெல்லி

தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய அச்சங்கள் தொடர்பான உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு பதில் அளித்து உள்ளது.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு, தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக மக்களிடையே இருந்த மிகுந்த அதிருப்தியும், அச்சமும் இருப்பதை சுட்டிக்காட்டியது.

தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி ) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து, பல மாநிலங்கள் தேசிய மக்கள்தொகை பதிவு (என்.பி.ஆர்) பயிற்சியை செயல்படுத்தப்போவதில்லை என்று கூறியிருந்தன.

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட அனைத்து தனிநபர் தகவல்களும் ரகசியமானவை. மக்கள் தொகை கணக்கெடுப்பில், பல்வேறு நிர்வாக மட்டங்களில் ஒருங்கிணைந்த தரவு மட்டுமே வெளியிடப்படுகிறது.

முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 ஐ வெற்றிகரமாக நடத்துவதற்கும் நிறைவு செய்வதற்கும் பொதுமக்களிடையே சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த பரந்த விளம்பர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனையில் தேசிய மக்கள்தொகை பதிவு உடன் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான கேள்வித்தாள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டை உருவாக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பது அரசு பல் வேறு நேரங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவில் சரியான மற்றும் தெளிவான செய்தியைத் தொடர்புகொள்வதற்கான 360 டிகிரி அணுகுமுறை பின்பற்ற அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள்தொகை பதிவு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஐ சுற்றியுள்ள தவறான தகவல்தொடர்பு மற்றும் வதந்திகளைச் சமாளிக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வாறாயினும், கொரோனா தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இன் முதல் கட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவு புதுப்பித்தல் மற்றும் பிற தொடர்புடைய கள நடவடிக்கைகள் அடுத்த உத்தரவுகள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com