வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்

வயநாட்டில் இன்று காலை நிலஅதிர்வு ஏற்பட்டது போல் பூமிக்கடியில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் விளக்கம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில், நிலச்சரிவை தெடர்ந்து வயநாட்டில் இன்று காலை 10.10 மணி அளவில் பூமிக்கு அடியில் மர்ம சத்தம் கேட்டுள்ளது.

இந்த சத்தம், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேட்டுள்ளது. அதாவது, குறிச்சியார் மலை, பிணங்கேடு மூரிக்காப், அம்புகுத்தி மலை, எடக்கல் குகைகளை சுற்றிய பகுதிகளில் இன்று திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது போல் பூமிக்கடியில் இருந்து திடீரென்று சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து பெதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி ஓடினர். சம்பவ இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள், தற்காலிகமாக மக்கள் அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இன்று காலை எவ்வித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது. வயநாட்டில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் தேசிய நில அதிர்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com