'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு ராகுல் காந்தி கண்டனம்

'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைப்பு ராகுல் காந்தி கண்டனம்
Published on

புதுடெல்லி

வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு நிறுவனங்களுக்கும் புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

ரூ. 1.45 லட்சம் கோடி ஊக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக கார்ப்பரேட் வரி விகிதங்களை அரசாங்கம் இன்று குறைத்துள்ளது. இதனால் வீழ்ந்து கிடந்த ஆட்டோமொபைல் துறை பங்குகள் பன்மடங்கு உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில் டெக்சாஸின் ஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஹவுடி மோடி' நிகழ்வுக்கு முன்னதாக கார்பரேட் வரி விகிதங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி இந்தியா ஒரு 'பொருளாதார குழப்பத்தில்' இருப்பதாகவும், "எந்தவொரு நிகழ்வாலும் யதார்த்தத்தை மறைக்க முடியாது" என்று கூறினார்.

"#HowdyIndianEconomy jamboree இன் போது பங்குச் சந்தை முன்னேற்றத்திற்கு பிரதமர் என்ன செய்யத் தயாராக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது"

"+ 1.4 லட்சம் கோடியில் ரூ. ஹூஸ்டன் நிகழ்வு உலகின் மிக விலையுயர்ந்த நிகழ்வு, ஆனால், எந்தவொரு நிகழ்வும் "ஹவ்டிமோடி" பொருளாதார குழப்பத்தின் யதார்த்தத்தை மறைக்க முடியாது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com