கேரள தலைமைச்செயலக தீ விபத்து- முக்கிய ஆவணங்களின் நிலை என்ன? முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்

கேரள தலைமை செயலகத்தில் கடந்த 25 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
கேரள தலைமைச்செயலக தீ விபத்து- முக்கிய ஆவணங்களின் நிலை என்ன? முதல்வர் பினராயி விஜயன் விளக்கம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளா தலைமை செயலகத்தில் கடந்த 25 ஆம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து போனதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் மற்றம் பாஜகவினர் தலைமை செயலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேரள தலைமை செயலகத்தில் நடந்த தீ விபத்தில் எந்த முக்கிய ஆவணங்களும் இழப்புக்கு உள்ளாகவில்லை.

தீ விபத்து தொடர்பாக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து கேரள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குநர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உள்ளது என்றார்..

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com