2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணத்தின்போது உணவு வழங்க தடை - மத்திய அரசு உத்தரவு

2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணத்தின்போது உணவு வழங்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மே 25-ந்தேதி, உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அப்போது, விமானத்தில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு உணவு வழங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்தநிலையில், இந்த உத்தரவில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று மாற்றம் செய்தது. அதன்படி, 2 மணி மற்றும் அதற்கு மேற்பட்ட பயண நேரம் கொண்ட விமான பயணங்களின்போது மட்டுமே, விமானத்தில் உணவு வழங்க வேண்டும் என்றும், 2 மணி நேரத்துக்கு குறைவான விமான பயணங்களில் உணவு வழங்க வேண்டாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. இந்த தடை 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com