நீட் தேர்வர்களின் நலனுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கம்: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வர்களின் நலனுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கம்: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா,

கொரோனோ நோய் தொற்று காரணத்தால் தள்ளிவைக்கப்பட்ட நீட் தேர்வு வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.

முன்னதாக கொரோனா பரவலுக்கு இடையே நீட் தேர்வை நடத்த எதிர்ப்பு எழுந்தது. கடினமான சூழ்நிலையில் மாணவர்கள் தேர்வெழுத முடியாது. இதனால் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த கூடாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வந்தது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் வழக்கு தொடுத்தன.

தேர்வினை ரத்து வேண்டும் என்று கோரி 11 மாணவர்கள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேர்வை ரத்து செய்து உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதோடு நீட் தேர்வை பாதுகாப்பான முறையில் நடத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ராஜஸ்தான், பஞ்சாப், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநில அரசுகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட காட்சிகள் சார்பாக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு தடையில்லை என திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக செப்டம்பர் 12 அன்று மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், மேற்குவங்காள அரசு ஆரம்பத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய ஊரடங்கை அறிவித்தது. 13 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நீட் 2020 தேர்வைக் கருத்தில் கொண்டு, 12 ஆம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை நீக்குவது குறித்து மாணவர் சமூகத்திடமிருந்து ஏராளமான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம், இது தேர்வு மையங்களுக்கு அவர்களின் பயணத்தை எளிதாக்க உதவுகிறது.

மாணவர்களின் ஆர்வத்தை மனதில் வைத்து, செப்டம்பர் 12 ஆம் தேதி ஊரடங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது, இதனால் மாணவர்கள் 13 ஆம் தேதி தேர்வில் எந்தவித அச்சமும், கவலையும் இல்லாமல் கலந்து கொள்ளலாம். அவர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com