தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழு பரிந்துரை

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
தொற்று பாதித்து குணம் அடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்: மருத்துவ குழு பரிந்துரை
Published on

புதுடெல்லி,

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம் என்றும் வல்லுநர் குழு குறிப்பிட்டுள்ளது.

தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்துவதற்கான கால இடைவெளியானது 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது. திட்டமிடப்படாத தடுப்பூசி திட்டம் உருமாறிய கொரோனாவை தூண்ட வழிவகுக்கும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com