புதிய தேசிய கல்வி கொள்கை தற்போதைக்கு அமல்படுத்தப்படாது- மேற்கு வங்க அரசு

நாட்டில், 1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, இதுவரை அமலில் இருந்தது. இதற்கு மாற்றாக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது
புதிய தேசிய கல்வி கொள்கை தற்போதைக்கு அமல்படுத்தப்படாது- மேற்கு வங்க அரசு
Published on

கொல்கத்தா,

நாட்டில், 1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, இதுவரை அமலில் இருந்தது. இதற்கு மாற்றாக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வியை மாற்றுவதில், தேசிய கல்வி கொள்கை 2020-ன் பங்கு என்ற தலைப்பில், புதிய கல்வி கொள்கை தொடர்பான கவர்னர்கள் மாநாடு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நேற்று நடந்தது. மாநில கல்வி மந்திரிகள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த மாநாட்டில் மேற்கு வங்காள மாநிலம் சார்பில் மாநில கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கலந்து கொண்டார். மாநாட்டுக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைக்கு மாநிலத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வாய்ப்பில்லை. அனைத்து தரப்பினருடனும் இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டின் கூட்டாட்சி கண்காணிப்பையும் மாநிலங்களின் பங்கையும் குறை மதிப்பிற்கு உட்படுவதால் தேசிய கல்வி கொள்கையின் சில அம்சங்களை பற்றி நாங்கள் எங்கள் இட ஒதுக்கீட்டை வெளிப்படுத்தியுள்ளோம். தற்போது தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த எந்த அவசரமும் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com