

திருவனந்தபுரம்,
கேரள முதல் மந்திரி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேரளாவில் புதிதாக இன்று யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்னிக்கை 502 ஆக உள்ளது.
கேரளாவில் புதிதாக கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதி எதுவும் இல்லை. 30- பேர் மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். 14,670 -பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. 34,500-க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில், 34.063 - பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளன என்றார்.