

புதுடெல்லி,
மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது.
இந்தியாவின் நலன்களை நீங்கள் சமரசம் செய்துவிட்டீர்கள். நீங்கள் 'பாரத மாதா'வை விற்று விட்டீர்கள். பிரதமர் இதெல்லாம் பலனின்றி செய்ய மாட்டார். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது கழுத்தை நெறித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தை காணலாம் என கூறினார். நாட்டு மக்களின் வருங்காலம் சரணடைய செய்யப்பட்டு விட்டது என குற்றச்சாட்டாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய கிரண் ரிஜிஜு, இந்த நாட்டை யாரும் விற்க முடியாது. யாரும் இதனை வாங்கவும் முடியாது. இந்தியாவை விற்பது பற்றியோ அல்லது வாங்குவது பற்றியோ ஒருவதும் நினைத்து கூட பார்க்க முடியாது. இதனை நான் ராகுல் காந்திக்கு நினைவூட்டினேன்.
நாடாளுமன்றத்திற்கு தகாத வார்த்தைகள், அவர் கூறிய தவறான விசயங்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும். குறிப்பிடும்படியாக அவர் கூறிய பொய்கள், குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என கூறினார்.