

புதுடெல்லி,
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேசிய தேர்வு முகமை சீர்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற நிலைக் குழு தனது பரிந்துரை அறிக்கையை மாநிலங்களவை செயலகத்தில் வழங்கி இருக்கிறது.
அதில் முக்கியமான போட்டித்தேர்வு களில் மாணவர்கள் தாமதமின்றி பங்கேற்பதற்கு வசதியாக, அந்த நாட்களில் பொதுக்கூட்டம், பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் எந்தவொரு தேர்வரும் பாதிக்கப்படாத வகையில், சீரான போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு வழிகாட்டும் வகையில், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டம் 2024-ஐ திருத்த வேண்டும் எனவும் அந்தக்குழு பரிந்துரைத்து இருக்கிறது.