ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். பயங்கரவாதம் கிடையாது - மத்திய அரசு

ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். பயங்கரவாதம் கிடையாது - மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவையில் பயங்கரவாத செயல்பாடு தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், சில துஷ்டர்களால் ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானின் கொடிகள் அசைக்கப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கையை கொண்ட ஐஎஸ்ஜேகே இயக்கத்தை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஜூன் 22-ம் தேதி கொல்லப்பட்டனர். இப்போது அந்த இயக்கத்தின் செயல்பாடு அங்கு கிடையாது. பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்களின் கொடிகளை அசைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று 2015-ல் 8 வழக்குகளும், 2016-ல் 31 வழக்குகளும், 2017-ல் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் கற்களை வீசிய சம்பவங்களில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அதனுடன் 39 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 8 பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களில் மூவரும் உயிரிழந்து உள்ளார்கள். அந்த சம்பவங்களில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு மாநிலத்தில் 86 உள்ளூர் பயங்கரவாதிகள் உள்பட 213 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com