2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தை நிறுத்தும் திட்டம் இல்லை : மத்திய அரசு உறுதி

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தை நிறுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தை நிறுத்தும் திட்டம் இல்லை : மத்திய அரசு உறுதி
Published on

புதுடெல்லி,

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக புழக்கத்தில் விடப்பட்டன. இந்த நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்தும் திட்டம் இருக்கிறதா? என்று நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அவர் தனது பதிலில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவது தொடர்பாக எந்த பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று கூறினார்.

மேலும் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை ரீதியாக புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாக கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர்,சிம்லா மற்றும் புவனேஸ்வர் ஆகிய 5 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட மூலக்கூறுகள் மூலம் இந்த நோட்டுகள் இந்திய அச்சகங்களிலேயே அச்சிடப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com