சட்டத்தை மீறினால் பாதுகாப்பு கிடையாது; மெட்டாவிடம் மத்திய அரசு கண்டிப்பு

'மெட்டா' நிறுவனத்துடன் மத்திய அரசின் கடுமையான பேச்சுவார்த்தை நடத்தியது.
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு கிடையாது; மெட்டாவிடம் மத்திய அரசு கண்டிப்பு
Published on

புதுடெல்லி,

'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் இடம்பெறுவதாக மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதுதொடர்பாக மத்திய அரசுக்கும், மெட்டா நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதன் விவரங்கள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:-

'மெட்டா' நிறுவனத்துடன் மத்திய அரசின் கடுமையான பேச்சுவார்த்தை, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் மீது நடவடிக்கைக்கும், விழிப்புணர்வுக்கும் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது. அது அப்பட்டமான விதிமீறல் என்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டியது. சட்டங்களை மீறினால் பாதுகாப்பு கிடையாது என்று மெட்டாவிடம் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் நோக்கம், தணிக்கை செய்வதோ, உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துவதோ அல்ல, இந்திய சட்டங்கள், விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், சமூக வலைத்தளத் தீமைகள் தணிக்கப்பட வேண்டும் என்பதுதான். 'வாட்ஸ்அப்'பில் பயனர் பெயரை பயன்படுத்தி செய்திகளை பகிர்ந்து கொள்ளும் முறைக்கு மத்திய அரசின் எதிர்ப்பு, ஆய்வில் இருக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com