1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர்கள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் இல்லை - தேசிய ஆவண காப்பகம்

இந்தியா வெற்றி பெற்ற 1962, 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களின் ஆவணங்கள் இல்லை என்று தேசிய ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போர்கள் தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் இல்லை - தேசிய ஆவண காப்பகம்
Published on

இந்திய அரசு மற்றும் அதன் அமைப்புகளின் ஆவணங்களையும், கோப்புகளையும் இந்திய தேசிய ஆவண காப்பகம் பாதுகாத்து பராமரித்து வருகிறது. இந்தநிலையில், டெல்லியில், நிர்வாக சீர்திருத்தத்துறை ஏற்பாடு செய்த நல்லாட்சி பயிலரங்கத்தில் தேசிய ஆவண காப்பக தலைமை இயக்குனர் சந்தன் சின்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அவர் பேசியதாவது:-

அரசு ஆவணங்களை பராமரிப்பது நல்லாட்சியின் முக்கியமான அங்கம். ஆனால், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து பல்வேறு அமைச்சகங்கள் ஆவண காப்பகத்திடம் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதே இல்லை.

மத்திய அரசில் 151 அமைச்சகங்கள் மற்றும் துறைகள் உள்ளன. அவற்றில் 36 அமைச்சகங்கள் உள்ளிட்ட 64 அமைப்புகளின் ஆவணங்கள் மட்டுமே எங்களிடம் உள்ளன.

இந்தியா வெற்றி பெற்ற 1962, 1965 மற்றும் 1971-ம் ஆண்டு போர்களின் ஆவணங்கள் இல்லை. இப்போதும் பெருமையாக பேசி வரும் 'பசுமை புரட்சி' தொடர்பான ஆவணங்களும் இல்லை.

சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த ஆண்டு தொடக்கம்வரை ராணுவ அமைச்சகம் வெறும் 476 கோப்புகளை மட்டுமே எங்களிடம் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com