பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப கையிருப்பு இல்லை - பிரதமருக்கு, முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம்

பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப கையிருப்பு இல்லை என்று பிரதமர் மோடிக்கு, முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்ப கையிருப்பு இல்லை - பிரதமருக்கு, முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம்
Published on

திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருகிற 15-ந் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 6 லட்சமாக உயரும் என்று அஞ்சப்படுகிறது. மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

இருப்பு வைக்கப்பட்டு இருந்த 450 டன் ஆக்சிஜனில் தற்போது 86 டன் மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பி வைக்கும் அளவிற்கு கையிருப்பு இல்லை.

ஆதலால் கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜனை எங்கள் உபயோகத்திற்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com