உ.பி.,மாநிலத்தில் 5 ஆண்டுகளில் எந்த கலவரமும் இல்லை : யோகி ஆதித்யநாத்

உ.பி.,மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த விதமான கலவரங்கள் நிகழவில்லை என உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பி.,மாநிலத்தில் 5 ஆண்டுகளில் எந்த கலவரமும் இல்லை : யோகி ஆதித்யநாத்
Published on

லக்னோ,

உ.பி.,மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த விதமான கலவரங்கள் நிகழவில்லை. அதே நேரத்தில் மாநிலத்தில் பெரிய அளவில் முதலீடுகள் வருகின்றன.

என உ.பி., மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார். மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த விழாவில் முதல்-மந்திரி பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி மாநிலத்தில் எந்த விதமான வகுப்பு கலவரமும் நடக்கவில்லை. மாநிலம் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு மாவட்டம் ஒரு மருத்துவக்கல்லூரி என்ற இலக்கை நோக்கி அரசு உழைத்து வருகிறது.

மாநிலத்தில் கல்வி, சுகாதாரம் விவசாயம் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சிப்பணிகளை அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

உ.பி.,மாநிலம் தொழில் முனைவோருக்கான விருப்பமான இடமாக மாறி வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com