எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது; தேஜஸ்வி யாதவ்

எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பாஜக அச்சமடைந்துள்ளாதாக பிகார் மாநில துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது; தேஜஸ்வி யாதவ்
Published on

பாட்னா,

பீகார் சட்டப்பேரவையில் இன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது பேசிய துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ், பாஜகவை கடுமையாக சாடினார். தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "நாங்கள் கிரிக்கெட் வீரர்கள். இந்தக் கூட்டணிக்கு முடிவே கிடையாது. இது நீண்ட இன்னிங்சாக தொடரப் போகிறது. இந்த முறை ரன் அவுட் ஆக மாட்டோம். இந்தக் கூட்டணி பீகார் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்காக சேர்ந்துள்ளது. யாராலும் இதைப் பிரிக்க முடியாது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலிமையடைந்து வருவதால் 2024 தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து பாஜக அச்சமடைந்துள்ளது. பீகாரில் பாஜக ஆட்சியை இழந்தபிறகு அவர்களின் உறவினர்களான அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரை ஏவி விடுகின்றனர்" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com