பஞ்சாபில் தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்காவிட்டால் சம்பளம் கிடையாது; அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

பஞ்சாபில் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபில் தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்காவிட்டால் சம்பளம் கிடையாது; அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
Published on

அமிர்தசரஸ்,

பஞ்சாபில் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் அரசு இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில்,

அரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.

இது தொடர்பான சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றினால் தான் சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவிவரும் சூழலில் பஞ்சாப் மாநில அரசின் இந்த கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com