

புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான கூடுதல் நோய் எதிர்ப்பு சக்திக்காக, 3-வது டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள சில நாடுகள் அனுமதி அளித்துள்ளன. இந்தியாவிலும் ஒரு சாரார் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குனர் பலராம் பார்கவா கூறியதாவது:-
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம் என்பதை நிரூபிக்க இதுவரை அறிவியல் ஆதாரம் எதுவும் வெளியாகவில்லை.
மேலும், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத்தான் இப்போதைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் கூறினார்