அடுத்த நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிரமிக்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெறாது - நிர்மலா சீதாராமன்

புதிய அரசு பதவி ஏற்கும்வரை, செலவினங்களை எதிர்கொள்வதற்கானதாக வரும் இடைக்கால பட்ஜெட் அமையும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு உலகளாவிய பொருளாதார கொள்கை மன்றம் கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி பேசினார்.
அடுத்த நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிரமிக்கத்தக்க அறிவிப்புகள் இடம்பெறாது - நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

அடுத்த நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு உலகளாவிய பொருளாதார கொள்கை மன்றம் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். 

அதில் அவர் பேசியதாவது:-

அடுத்த ஆண்டு கோடை காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே, பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், பிரிட்டிஷ் நடைமுறைப்படி, இடைக்கால பட்ஜெட் என்றே அழைக்கப்படும்.

புதிய அரசு பதவி ஏற்கும்வரை, செலவினங்களை எதிர்கொள்வதற்கானதாக அந்த பட்ஜெட் அமையும். எனவே, அதில் பிரமிக்கத்தக்க அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாது.

புதிய அரசு பதவி ஏற்று, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதுவரை காத்திருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com