ஹத்ராசில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை - பா.ஜ.க. எம்.பி. மோகன் மாண்டவி

ஹத்ராஸ் மாவட்டத்தில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என பா.ஜ.க. எம்.பி. மோகன் மாண்டவி தெரிவித்துள்ளார்.
ஹத்ராசில் எந்த ஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை - பா.ஜ.க. எம்.பி. மோகன் மாண்டவி
Published on

ராய்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை விசாரித்து வருகிறது. நீதிமன்ற சம்மனை ஏற்று ஆஜரான பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், தங்களுடைய சம்மதமின்றி சடலத்தை அதிகாரிகள் எரித்ததாக வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை நவம்பர் 2-ம் தேதி நடக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் எந்தஒரு அடக்குமுறை சம்பவமும் நடைபெறவில்லை என பா.ஜனதா எம்.பி. மோகன் மாண்டவி கூறியிருக்கிறார். சத்தீஷ்கரில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், நடக்காத ஒன்றை நடந்ததாக காட்டவே காங்கிரஸ் தலைவர்கள் ஹத்ராஸ் செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் பாஸ்தருக்கு செல்லாதது ஏன்? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். பஸ்தரில் கூட்டு பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுமி தற்கொலை செய்துக்கொண்டதை குறிப்பிட்டு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com