டோக்லாம் விவகாரம் இந்தியா - சீனா தங்களுடைய நிலைப்பாட்டில் ஸ்திரம், சீனா மிரட்டிப் பார்க்கிறது

டோக்லாம் விவகாரத்தில் இந்தியா - சீனா தங்களுடைய நிலைப்பாட்டில் ஸ்திரமாக உள்ளது.
டோக்லாம் விவகாரம் இந்தியா - சீனா தங்களுடைய நிலைப்பாட்டில் ஸ்திரம், சீனா மிரட்டிப் பார்க்கிறது
Published on

புதுடெல்லி/பெய்ஜிங்,

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் முச்சந்திப்பான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளதால், சிக்கிம் எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்தியா இருதரப்பும் ராணுவத்தை திரும்ப பெற்றால்தான் பேச்சுவார்த்தை என கூறிவிட்டது.

பாராளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் பேசுகையில், பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. முச்சந்திப்பில் சீனா ஒருதலைப்பட்சமாக எல்லை நிலையை மாற்ற முயற்சி செய்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கையானது. பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயார், பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு அழைக்க வேண்டும்.சீனா முச்சந்திப்பில் நிலையை மாற்றினால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகள் நம்முடன் உள்ளது, என்றார்.

டோக்லாம் பதற்றத்தை தணிக்க இந்தியா - சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறிஉள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரிக்ஸ் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துக் கொள்ளும் மாநாடு ஜூலை 27-28ல் சீனாவில் நடைபெறுகிறது. அஜித் தோவல் தலைமையில் செல்லும் இந்திய அதிகாரிகள் குழு, சீன தரப்புடன் டோக்லாம் விவகாரம் தொடர்பாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதை அநாட்டு அதிகாரிகள் தரப்பு தகவல் குறிப்பிடுகிறது.

இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், இருதரப்பு கூட்டம் தொடர்பாக பேசுகையில், இப்போது இதுதொடர்பான தகவல்கள் என்னிடம் கிடையாது. இப்போது எங்களுக்கு தெரியவந்து உள்ள தகவல், முந்தைய கூட்டங்களில் வழக்கமாக குழுக்களின் தலைவர்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வார்கள், என பேசிஉள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு எல்லையில் இருந்து இந்திய ராணுவம் திரும்ப வேண்டும் என சீனா மீண்டும் கூறிஉள்ளது.

இந்தியா ஏற்கனவே இருதரப்பும் ராணுவத்தை பழைய நிலைக்கு திரும்ப அழைக்க வேண்டும் என கூறிவிட்ட நிலையில் சீனா மீண்டும் தனது பழைய பல்லவியையே பாடிஉள்ளது.

சீன ராணுவம் மிரட்டல்

சீன பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் வு குயான் பேசுகையில், மலையைகூட அசைத்துவிடலாம், சீன ராணுவத்தை ஒன்றும் செய்ய முடியாது, என கூறிஉள்ளார். சீனாவின் பகுதியையும், இறையாண்மையையும் வலிமையாக சீன ராணுவம் காக்கும் என எப்போதும் போல சீன தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com