மோடி அரசுக்கு ஊழலின் மீது சகிப்பின்மை உள்ளது - அமைச்சர் கட்கரி

மோடி அரசுக்கு ஊழலின் மீது சகிப்பின்மையே உள்ளது என்றார் அமைச்சர் நிதின் கட்கரி.
மோடி அரசுக்கு ஊழலின் மீது சகிப்பின்மை உள்ளது - அமைச்சர் கட்கரி
Published on

ராஞ்சி

காங்கிரசின் குடும்ப அரசியல் ஒரு சில தலைவர்களை தவிர இதரர்க்கு பலன் ஏதும் கொடுக்கவில்லை; மாறாக இன்றைய ஆட்சிக்கு செயலே முக்கியம். அதனால் ஊழலை ஒழிக்க உறுதி பூண்டுள்ளது என்றார் கட்கரி.

வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் எழும்பியது. ஆனால் உண்மையில் வறுமை ஒரு சில தலைவர்கள் தவிர வறுமை ஒழிய வேண்டிய தேவையுள்ளவர்களிடம் ஒழியவில்லை என்றார். இதுவரை எனது தலைமையிலான அமைச்சகத்தினால் ரூ. 6,50,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. ஆனால் ஒரு ஒப்பந்தக்காரர் கூட எந்தவொரு விஷயத்திற்கும் எனது அலுவலகத்திற்கு வந்ததில்லை என்றார் கட்கரி,

நதிகள் இணைப்பு

நதிகள் இணைப்பு திட்டத்தில் ஆரம்ப கட்டமாக 30 பெரிய திட்டங்கள் நதிகளை இணைக்கப்படும். அடுத்த மூன்று மாதங்களில் அத்தகைய ஐந்து திட்டங்கள் பிரதமரால் துவங்கப்படும். அந்த முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றாக பிரம்மபுத்திராவையும் காவேரியையும் இணைக்கும் திட்டம் துவங்கப்படும். வட கிழக்கு மாநிலங்களை வெள்ள அபாயத்திலிருந்து காத்திட மத்திய மற்றும் தென் மாநிலங்களுக்கு அதன் உபரி வெள்ள நீர் திருப்பிவிடப்படும் என்றும் கட்கரி கூறினார்.

பயோ - எத்தனால்

வரும் டிசம்பர் மாதம் முதல் வாகனங்கள் பயோ-எத்தனால், மெத்தனால் ஆகியவற்றினால் இயக்கப்படும் நிலை ஏற்படும். நிலக்கரியிலிருந்து மெத்தனால் தயாரிக்கும் முறையை கொண்டு வர நிதி ஆயோக் உறுப்பினர் வி கே சாரஸ்வத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எல் பி ஜி கட்டணம் ரூ 50 வரை குறைந்து கங்கையில் நீராவி படகு செலுத்துபவர்கள் பயனடைவார்கள் என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com